கயமை
1071மக்களே போல்வர் கயவ ரவரன்ன
வொப்பாரி யாங்கண்ட தில்.

குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப்  போலக்
காட்டிக் கொள்வார். மனிதர்களிடம்  மட்டும்தான்  இப்படி  இருவகையான
நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.