கயமை
1077ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.

கையை  மடக்கிக்  கன்னத்தில்  ஒரு  குத்துவிடுகின்ற  முரடர்களுக்குக்
கொடுப்பார்களேயல்லாமல்,   ஈகைக்   குணமில்லாத   கயவர்கள்   ஏழை
எளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள்.