கயமை
1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்.

குறைகளைச்  சொன்னவுடனே  சான்றோரிடம்  கோரிய பயனைப் பெற
முடியும்;   ஆனால்   கயவரிடமோ   கரும்பை  நசுக்கிப்  பிழிவதுபோல்,
போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.