கயமை
1079உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்.

ஒருவர்  உடுப்பதையும்  உண்பதையும்  கண்டுகூட பொறாமைப் படுகிற
கயவன்,  அவர்மீது  வேண்டு  மென்றே  குற்றம்  கூறுவதில் வல்லவனாக
இருப்பான்.