தகையணங்குறுத்தல்
1087கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்;
அது   மங்கையொருத்தியின்   சாயாத   கொங்கை  மேல்  அசைந்தாடும்
ஆடைபோல் இருந்தது.