குறிப்பறிதல்
1091இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

காதலியின்  மைதீட்டிய  கண்களில்  இரண்டு  வகையான  பார்வைகள்
இருக்கின்றன; ஒரு  பார்வை  காதல்  நோயைத் தரும் பார்வை; மற்றொரு
பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.