குறிப்பறிதல்
1095குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

அவள்  என்னை  நேராக  உற்றுப்  பார்க்கவில்லையே   தவிர,  ஒரு
கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு
தனக்குள் மகிழ்கிறாள்.