குறிப்பறிதல்
1097செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும்
உறாஅர்போன் றூற்றார் குறிப்பு.

பகையுணர்வு  இல்லாத  கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற
கடுவிழியும்,  வெளியில்  அயலார்  போல  நடித்துக்கொண்டு உள்ளத்தால்
அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.