புணர்ச்சி மகிழ்தல்
1101கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள.

வளையல்  அணிந்த  இந்த  வடிவழகியிடம்;  கண்டு மகிழவும், கேட்டு
மகிழவும்,   தொட்டு   மகிழவும்,   முகர்ந்துண்டு   மகிழவுமான   ஐம்புல
இன்பங்களும் நிறைந்துள்ளன.