புணர்ச்சி மகிழ்தல்
1105வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோள்தாழ் கதுப்பினா டோள்.

விருப்பமான  பொருள்   ஒன்று,  விரும்பிய  பொழுதெல்லாம்  வந்து
இன்பம்  வழங்கினால்  எப்படியிருக்குமோ  அதைப் போலவே பூ  முடித்த
பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.