புணர்ச்சி மகிழ்தல்
1106உறுதோறு றுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

இந்த   இளமங்கையைத்    தழுவும்  போதெல்லாம்   நான்  புத்துயிர்
பெறுவதற்கு  இவளின்  அழகிய  தோள்கள்  அமிழ்தத்தினால்  ஆனவை
என்பதுதான் காரணம் போலும்.