புணர்ச்சி மகிழ்தல்
1110அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.

மாம்பழ  மேனியில்  அழகிய  அணிகலன்கள்   பூண்ட  மங்கையிடம்
இன்பம்   நுகரும்   போதெல்லாம்   ஏற்படும்   காதலானது,   இதுவரை
அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.