நலம் புனைந்துரைத்தல்
1113முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

முத்துப்பல்   வரிசை,   மூங்கிலனைய   தோள்,   மாந்தளிர்   மேனி,
மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!