நலம் புனைந்துரைத்தல்
1114காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.

என்   காதலியைக்   குவளை   மலர்கள்  காண  முடிந்தால்,  "இவள்
கண்களுக்கு நாம் ஒப்பாக  முடியவில்லையே!" எனத்  தலைகுனிந்து நிலம்
நோக்கும்.