நலம் புனைந்துரைத்தல்
1115அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவளுக்காக  நல்லபறை  ஒலிக்கவில்லை;  ஏனெனில்  அவள்  இடை
ஒடிந்து  வீழ்ந்துவிட்டாள்;  காரணம்,  அவள் அனிச்ச  மலர்களைக் காம்பு
நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.