நலம் புனைந்துரைத்தல்
1116மதியும் மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.

மங்கையின்   முகத்துக்கும்,    நிலவுக்கும்    வேறுபாடு   தெரியாமல்
விண்மீன்கள் மயங்கித் தவிக்கின்றன.