நலம் புனைந்துரைத்தல்
1119மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றல் மதி.

நிலவே!  மலரனைய  கண்களையுடைய   என்   காதல்   மங்கையின்
முகத்திற்கு    ஒப்பாக    நீயிருப்பதாய்    பெருமைப்பட்டுக்    கொள்ள
வேண்டுமேயானால்  (அந்தப் போட்டியில்  நீ  தோல்வியுறாமல் இருந்திட)
பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.