காதற் சிறப்புரைத்தல்
1123கருமணியுட் பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற் கில்லை யிடம்.

நான்   விரும்புகின்ற   அழகிக்கு    என்    கண்ணிலேயே   இடம்
கொடுப்பதற்காக -   என்   கண்ணின்  கருமணியில்   உள்ள  பாவையே!
அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!