காதற் சிறப்புரைத்தல்
1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.

ஒளி   கொண்டிருக்கும்   விழிகளையுடைய   காதலியின்  பண்புகளை
நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.