காதற் சிறப்புரைத்தல்
1129இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில ரென்னுமிவ் வூர்.

கண்ணுக்குள்  இருக்கும்  காதலர்  மறைவார்  என  அறிந்து கண்ணை
இமைக்காமல்   இருக்கின்றேன்;  அதற்கே   இந்த  ஊர்   தூக்கமில்லாத
துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லாதவர் என்று அவரைக் கூறும்.