நடுவுநிலைமை
114தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்.

ஒருவர்  நேர்மையானவரா  அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா
என்பது  அவருக்குப்  பின்  எஞ்சி  நிற்கப்  போகும்  புகழ்ச் சொல்லைக்
கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.