அலரறிவுறுத்தல்
1149அலர்நாண லொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நந்தக் கடை.

உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம்  என்று உறுதியளித்தவர்
பலரும்  நாணும்படியாக  என்னை  விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது
நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.