பிரிவாற்றாமை
1158இன்னாது இனனில்லூர் வாழ்த லதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.

நம்மை  உணர்ந்து  அன்பு  காட்டுபவர்  இல்லாத   ஊரில்  வாழ்வது
துன்பமானது;  அதைக்  காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து
வாழ்வது.