படர்மெலிந்திரங்கல்
1162கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.

காதல்  நோயை   என்னால்   மறைக்கவும்   முடியவில்லை;  இதற்குக்
காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.