படர்மெலிந்திரங்கல்
1167காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.

நள்ளிரவிலும்  என்   துணையின்றி   நான்  மட்டுமே   இருக்கிறேன்;
அதனால்,  காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண
இயலாமல் கலங்குகிறேன்.