கண்விதுப்பழிதல்
1173கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

தாமாகவே  பாய்ந்து  சென்று  அவரைப்  பார்த்து  மகிழ்ந்த கண்கள்,
இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத் தக்க ஒன்றாகும்.