பசப்புறுதல்
1182அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
மேனிமே லூரும் பசப்பு.

பிரிவு   காரணமாகக்   காதலர்   உண்டாக்கினார்  எனும்  பெருமிதம்
பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!