பசப்புறுதல்
1186விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கின்  ஒளிகுறையும்  சமயம்  பார்த்துப் பரவிடும் இருளைப்போல,
இறுகத் தழுவிய  காதலன்பிடி,  சற்றுத்  தளரும்போது காதலியின் உடலில்
பசலைநிறம் படர்ந்து விடுகிறது.