தனிப்படர்மிகுதி
1195நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

நான் விரும்பிக் காதல்  கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக்
காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன  இன்பம் கிடைக்கப்
போகிறது?