தனிப்படர்மிகுதி
1196ஒருதலையா னின்னாது காமங்காப் போல
விருதலை யானும் மினிது.

காவடித்  தண்டின்  இரண்டு   பக்கங்களும்   ஒரே  அளவு  கனமாக
இருப்பதுபோல்,  காதலும்  ஆண்,  பெண்  எனும்  இருவரிடத்திலும் மலர
வேண்டும்;  ஒரு   பக்கம்  மட்டுமே  ஏற்படும்  காதலால்  பயனுமில்லை;
துயரமும் உருவாகும்.