தனிப்படர்மிகுதி
1198வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

பிரிந்து  சென்ற  காதலரிடமிருந்து   ஓர்   இனிய  சொல்கூட  வராத
நிலையில்,  உலகில்  வாழ்கின்றவரைப்  போல்,  கல் நெஞ்சம் உடையவர்
யாரும் இருக்க முடியாது.