வான் சிறப்பு.
12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

யாருக்கு   உணவுப்      பொருள்களை    விளைவித்துத்தர   மழை
பயன்படுகிறதோ,   அவர்களுக்கே   அந்த  மழை   அவர்கள் அருந்தும்
உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.