குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நினைந்தவர் புலம்பல்
1201
உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது.
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே
நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.