நினைந்தவர் புலம்பல்
1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே
என்   காதலரும்    என்னை    நினைப்பது   போலிருந்து,  நினைக்காது
விடுகின்றாரோ?