நினைந்தவர் புலம்பல்
1208எனைத்து நினைப்பினுங் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு.

எவ்வளவு   அதிகமாக   நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது
சினம்    கொள்ளமாட்டார்.   அவர்   எனக்குச்  செய்யும் பெரும் உதவி
அதுவல்லவா?