கனவுநிலை யுரைத்தல்
1212கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.

நான்    வேண்டுவதற்கு  இணங்கி   என் மை எழுதிய கயல் விழிகள்
உறங்கிடுமானால், அப்போது என் கனவில்   வரும்    காதலர்க்கு   நான்
இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.