உறுப்பு நலனழிதல்
1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பசலை நிறம் கொண்டு  நீர்  பொழியும்  கண்கள்,  விரும்பிய  காதலர்
அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லிக் காட்டுகின்றன.