உறுப்பு நலனழிதல்
1236தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து.

என் தோள்கள்  மெலிவதையும்,  வளையல்கள்  கழன்று விழுவதையும்
காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம்
நொந்து போகிறேன்.