உறுப்பு நலனழிதல்
1238முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

இறுகத்    தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு
இடைவெளியையும்   பொறுத்துக்  கொள்ள  முடியாமல் காதலியின் நெற்றி,
பசலைநிறம் கொண்டுவிட்டது.