உறுப்பு நலனழிதல்
1239முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

இறுகத்  தழுவியிருந்த  போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால்
அதையே ஒரு  பிரிவு  எனக் கருதி   காதலியின் அகன்று நீண்ட கண்கள்
பசலை நிறம் கொண்டன.