நெஞ்சொடு கிளத்தல்
1242காத லவரில ராகநீ நோவது
பேதமை வாழியென் னெஞ்சு.

அவர்   நமது   காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ
மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.