நெஞ்சொடு கிளத்தல்
1244கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்காண லுற்று.

நெஞ்சே!    நீ   காதலரிடம்    செல்லும்போது     கண்களையும்கூட
அழைத்துக்கொண்டு   போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று
என்னையே அவை தின்றுவிடுவது போல் இருக்கின்றன.