நெஞ்சொடு கிளத்தல்
1245செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றா லுறாஅ தவர்.

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத  அவர்,  நம்மை
வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட   காதலைக்   கை
விட்டு விட முடியுமா?