நெஞ்சொடு கிளத்தல்
1246கலந்துணர்ந்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

நெஞ்சே!   கூடிக்   கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு
தடவைகூடப்    பிணங்கியறியாத   நீ  இப்போது அவர் மீது கொள்ளுகிற
கோபம் பொய்யானது தானே?