நெஞ்சொடு கிளத்தல்
1247காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.

நல்ல   நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது   விட்டு   விடு;
அல்லது      அதனைத்    துணிந்து   சொல்ல   முடியாமல்   தடுக்கும்
நாணத்தையாவது   விட்டு  விடு.   இந்த  இரண்டு  செயல்களையும் ஒரே
நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.