நெஞ்சொடு கிளத்தல்
1248பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

நம்மீது இரக்கமின்றிப்  பிரிந்து  விட்டாரேயென்று   ஏங்கிடும்  அதே
வேளையில்  பிரிந்தவர்  பின்னாலேயே  சென்று   கொண்டிருக்கும்  என்
நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.