அடக்கமுடைமை
125எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

பணிவு  என்னும்  பண்பு, எல்லார்க்கும்  நலம்  பயக்கும்.  ஏற்கனவே
செல்வர்களாக     இருப்பவர்களுக்கு     அந்தப்  பண்பு,  மேலும்  ஒரு
செல்வமாகும்.