நிறையழிதல்
1251காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காதல்   வேட்கை   இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம்
எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட    மனஅடக்கம்    என்கிற    கதவையே
உடைத்தெறிந்து விடுகின்றது.