நிறையழிதல்
1254நிறையுடையே னென்பேன்மன் யானோயென் காம
மறையிறந்து மன்று படும்.

மன  உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என்
காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே  வெளிப்பட்டு
விடுகிறதே.