நிறையழிதல்
1259புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்த லுறுவது கண்டு.

ஊடல்   கொண்டு   பிணங்குவோம்  என  நினைத்துதான் சென்றேன்;
ஆனால் என்    நெஞ்சம்   என்னை     விடுத்து அவருடன் கூடுவதைக்
கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.